புகழ்பெற்ற குலசை தசரா… கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
kulasai dasara1 - 2026

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில். இந்தக் கோயிலில் பிரசித்தி பெற்ற தசரா பண்டிகை செப்.29 இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் குவிகிறார்கள்.

விதவிதமான வேடங்களைத் தரித்துக் கொண்டு, மகிஷாசுர வதம் நிகழ்ச்சியின் போது தெருக்களில் வலம் வருவது வழக்கம். இதைக் கண்பதற்கென்றே வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் இங்கே வருகின்றனர்.

kulasekarappattinam temple - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.