
ஏழாவது முறையாக ஆதார் இணைப்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் இணைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
வருமான வரித் துறை வழங்கும் பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும், அதற்குள் பான் எண் – ஆதார் இணைக்கப் படவில்லை என்றால், பான் எண்ணை இழக்க வேண்டியிருக்கும் என்று கூறப் பட்டது.

இந்நிலையில், தற்போது ஏழாவது முறையாக மீண்டும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அரசின் இந்த அறிவிப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பு அளித்தது.
இதை அடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த எண் இணைப்பதற்காக அளிக்கப்பட்டிருந்த கால அவகாசம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க பட்டு, செப்டம்பர் இறுதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.



