டிரெண்ட் ஆன ரஜினி! தூள் கிளப்பிய ஹேஷ்டேக்குகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
thuglaq50 rajini - 2026

#IStandWithRAJINIKANTH #ரஜினிகாந்த் #பெரியாராவதுமயிராவது #மன்னிப்புகேட்கமுடியாது #மன்னிப்பாவதுமயிராவது #RajiniNotSorry – இவையெல்லாம் இன்று ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து துக்ளக் படிப்பவர்கள் சித்தாந்தச் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு போட்டு வந்த ஹேஷ் டேக்குகள்.

அதே நேரம், #சூப்பர்சங்கிரஜினி #ரஜினிஒருமெண்டல் என முரசொலி படிப்பவர்கள் ஹேஷ்டேக் பதிவிட்டு, தங்கள் பரம்பரை அடிமைத்தன விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்கள்.

ரஜினியின் இன்றைய ‘ஸாரி, மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது’ பேட்டியைத் தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் ரஜினி இன்று முக்கிய இடம் பிடித்தார். ரஜினி குறித்த ஹேஷ்டேக்குகள் பெருமளவு ட்ரெண்ட் ஆகின.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற ‘துக்ளக்’ பொன்விழா ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி பேசியபோது, சேலத்தில் ஈ.வெ.ரா நடத்திய ஊர்வலத்தில் கடவுள் ராமர், சீதை சிலைகள் ஆடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்றார். மேலும், அப்போது இந்த நிகழ்வு குறித்த செய்தியை துக்ளக் வெளியிட்டதும், அதனை மாநில அரசு தடை செய்ததும், அதனை மீறி பிளாக்கில் அச்சடித்து விற்று துக்ளக் பெரும் புகழ் ஈட்டியது குறித்தும் ரஜினி கோடிட்டுப் பேசினார். .

அவரது இந்தப் பேச்சுக்கு திமுக உள்பட திக., இயக்கங்கள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை அடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, இல்லாத விஷயத்தை நான் பேசவில்லை. நான் கேள்விபட்டதை, பத்திரிகைகளில் வெளியானதைதான் பேசினேன். இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதிபடக் கூறினார்.

இதை அடுத்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின. #IStandWithRAJINIKANTH #ரஜினிகாந்த் #பெரியாராவதுமயிராவது #மன்னிப்புகேட்கமுடியாது #மன்னிப்பாவதுமயிராவது #RajiniNotSorry #Rajinikanth, உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகியுள்ளன. இதில் ஏராளமானோர் ரஜினிக்கு ஆதரவாகவும், புகழ்ந்தும் கருத்து எழுதி வருகின்றனர். வேறு சிலர், விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டனர்.

இந்நிலையில், 1971ல் நடைபெற்ற சம்பவங்களைப் பதிவு செய்துள்ள இதழ்களின் நகல்கள் தற்போது பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். துக்ளக் இதழில் பதிவு செய்யப் பட்ட படத்தையே மீண்டும் பிரசுரித்து துக்ளக் இதழ் இன்று வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.