ஆர்கே நகர் தொகுதி இடை தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பினார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு நடிகர் விஷால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறியபோது ஆர்.கே.நகர் தேர்தலில் நான் 100% வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றார்.
நான் அரசியல்வாதி அல்ல; மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.
ஆர்.கே.நகர் மக்களின் தைரியத்தை ஆதரவாக எடுத்துக்கொண்டு தேர்தலில் நிற்கிறேன் என்று கூறினார் விஷால்.
பின்னர் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், விஷால் மரியாதை செலுத்தினார்.



