மைசூரு: அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் குணம் இந்து மதத்திற்கே உரிய சிறப்பு எனக் கூறினார் பாஜக., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.
கர்நாடக மாநிலம் மைசூரு நகர் ஊட்டி சாலையில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் 32 அடி உயரத்தில் அனுமன் சிலை உள்ளது. இங்குள்ள 3டி தொழில்நுட்பத்தை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய் அத்வானி, இந்து மதத்துக்கு மட்டும் தான் அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் குணம் உள்ளது. அதனால்தான் நம் இந்தியாவின் கலாசாரத்தை பல்வேறு நாடுகளும் வியந்து பார்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்து மதம் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தன்னுடன் பொருத்திக் கொள்கிறது. இந்து மதத்தில் உள்ள நல்ல அம்சங்களைத் தெரிந்து கொள்வதால் மக்கள் நிம்மதி மற்றும் ஒற்றுமையுடன் உள்ளனர். சகிப்புத்தன்மை குணத்தால்தான் நம் நாட்டில் சகோதரத்துவம் வளர சாத்தியம் ஏற்படுகிறது என்று பேசினார்.



