அனுமதியற்ற சிலைகளை அகற்ற உத்தரவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
ஈவேரா சிலை

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை உடனே அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுமதி பெறாத சிலைகளை அகற்றுவதற்கு 2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழிவகை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இதனை மீறி செயல்படுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதிலுமுள்ள அனுமதி பெறாத சிலைகளை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.