corrier
corrier

மெடிக்கல் உரிமையாளர் ஒருவர் தனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில், தனது மகனை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் அவர் எடுத்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

33 வயதான விக்ரம் யாதவ், மகாராஷ்டிராவின் மும்பையின் ஜோகேஸ்வரி (கிழக்கு) பகுதியில் வசித்து வருகிறார். மருந்து கடையை நடத்தி வரும் இவர், டாக்டர் ராஜேஷ் குமாரிடம் இருந்து, ​​யாதவ் ரூ .20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இவருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, தனது மகனின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாமல், அவரது மகனை பள்ளியில் இருந்து நீக்கியது.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த யாதவ், தனது நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டு அவரின் மெடிக்கலுக்கு பக்கத்திலிருக்கும் டாக்டர் ராஜேஷ் குமாரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன் படி யாதவ், 18 வயதான கல்லூரி மாணவர் ராஜேஷ், 32 வயதான அஜய் ஆகியோருடன் வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில், டாக்டரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

அப்போது டாக்டரின் மனைவி மட்டும், பிளாட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்டு, ​​ராஜேஷ் மற்றும் அஜய் கூரியர் டெலிவரி செய்வது போல் ஏமாற்றி, கதவை திறந்த பிறகு டாக்டரின் மனைவியை தாக்கி விட்டு வீட்டிலிருந்த நகைகளை எடுக்க சென்றனர்.

ஆனால், அந்த பெண் கத்தி கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அவர்களை வசமாக பிடித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending