அக்கறையோடு செய்ய.. தக்காளி கீரை மசியல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Tomato Spinach Mash
Tomato Spinach Mash

தக்காளி கீரை மசியல்
தேவையான பொருட்கள்
பெங்களூர் தக்காளி – 2,
எண்ணெய் – 1/2 டேபிள்ஸ்பூன்,
சிறுகீரை – 1/2 கட்டு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
பூண்டு – 3 பல்,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு – தேவைக்கு,
காய்ந்தமிளகாய் – 3,
பாசிப்பயறு – 50 கிராம்,
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை
சிறுகீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சீரகம், இடித்த பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கி, மஞ்சள் தூள், நறுக்கிய காய்ந்தமிளகாயை சேர்க்கவும். பின்பு கீரை, பாசிப்பயறு, கறிவேப்பிலை, தக்காளி, உப்பு போட்டு வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். பிளெண்டரால் மசித்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: செங்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரையிலும் மசியல் செய்யலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.