
தக்காளி பீர்க்கங்காய் கூரா
பெங்களூர் தக்காளி – 500 கிராம்,
பெரிய வெங்காயம் – 2,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
முற்றாத பீர்க்கங்காய் – 250 கிராம்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்.
செய்முறை
தக்காளி, வெங்காயம், பீர்க்கங்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், பீர்க்கங்காய், தக்காளியை சேர்த்து வதக்கி, சீரகம், மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல் வதக்கவும். நன்கு வதங்கியதும் கறிவேப்பிலையை தூவி இறக்கவும். இட்லி, தோசையுடன் பரிமாறவும்.


