விமானத்தை தவறவிட்டதால் 7 கோடி பரிசு! அதிர்ஷ்ட பெண்மணி!

உலகம் சற்றுமுன்
lottery
lottery

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் விமானத்தை தவற விட்ட பெண், சூப்பர் மார்க்கெட்டில் நேரத்தை செலவிட்ட போது லாட்டரி சீட்டு வாங்கினார்.

இதில் அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 7 கோடியே 44 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு லாட்டரி சீட்டில் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

புளோரிடா லாட்டரி செய்தி வெளியீட்டின் படி, ப்ளோரிடா மாகாணத்தின் மிசோரி, கன்சாஸ் சிட்டியைச் சேர்ந்த ஏஞ்சலா கேரவெல்லா (வயது 51) . இவர் செல்ல வேண்டிய விமானம் திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதனால் கேரவெல்லா அடுத்த விமானம் வரும் வரை அந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்று ஏதாவது வாங்குவோம் எனறு நினைத்துள்ளார். அப்படியே அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க விரும்பினார்.

அவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. அதாவது இந்திய மதிப்பில் 7 கோடியே 44 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரவெல்லா தனது வெற்றிச் சீட்டை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்தார் . விமானத்தை தவறவிட்டவருக்கு கோடிகளில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இது குறித்து அவர் கூறும் போது, விமானத்தை தவறவிட்ட பிறகு எதார்த்தமாக நேரத்தை கடத்துவதற்காக சூப்பர் மார்க்கெட் என்று லாட்டரி டிக்கெட் வாங்கினேன். அதற்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்று நெகிழ்ந்தார்.

இதனிடையே குறிப்பிட்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பெண்ணுக்கு vல்லாம் போக 5,88,53,025 ரூபாய் பரிசு கிடைக்கும். அதை விற்றதற்காக கடைக்கு $ 2,000 போனஸ் கமிஷன் கிடைக்குமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1,48,995 ரூபாய் கிடைக்கும்.

காரவெல்லா வென்ற லாட்டரி சீட்டு பரிசு கூப்பன் 2020 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்றும் $ 1 மில்லியன் மற்றும் $ 948 மில்லியனுக்கும் அதிகமான பணப் பரிசுகளை கொண்டுள்ள பரிசு கூப்பன்களுடன் லாட்டரி விற்கப்படுகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே பரிசு வென்ற பெண் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.