ஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் போட்டி! மாலில் வைரலான சண்டை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
shopping
shopping

பீகார் மாநிலத்தில், ஒரு ஷாப்பிங் மாலில் ஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது.

பீகார் மாநிலம், முசாஃபர்நகர் பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ஒரு இளைஞனுக்கு மூன்று பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் மூன்று பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். ஒரு பையனுக்காக மூன்று பெண்கள் அடித்துக்கொள்வது அவர்கள் பேசுவதிலிருந்து தெரியவருகிறது.

shoping mall
shoping mall

முதலில் இரண்டு பெண்கள் தான் அடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சமாதானப்படுத்த வந்த மூன்றாவது பெண்ணும் அவர்களுடன் சேர்ந்து, ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுக்கொண்டனர்.

அங்கிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பையன் ஒரு கட்டத்தில் அவர்களை பிரிக்க முயற்சி செய்தான். இதைப் பார்த்த மாலில் இருந்த மக்கள் ஒன்றாக கூடி இவர்கள் சண்டை போடுவதை வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.

Fight
Fight

இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் வருவதற்குள் அந்த பெண்கள் அங்கிருந்து சென்றதால் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இது சம்பந்தமாக யாரும் புகாரும் அளிக்கவில்லை. ஒரு பையனுக்காக 3 பெண்கள் அடித்துக்கொண்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.