ஆரோக்கிய சமையல்: சிறுகீரை கடையல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Spinach kadayal
Spinach kadayal

சிறுகீரை கடையல்

தேவையானவை:
சிறுகீரை – ஒரு கட்டு,
வேகவைத்த துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பழுத்த நாட்டுத் தக்காளி – 4, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். வாணலி அல்லது மண் சட்டியில் நெய் விட்டு, சீரகம் தாளித்து… அரைத்த தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கீரை, மிளகாய்த்தூள், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து வேகவிடவும் (தேவையெனில் கால் கப் நீர் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை `சிம்’மில் வைக்கவும்). கீரை வெந்த பின் இறக்கி, நன்கு கடையவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.