
தற்போதுள்ள திருமணங்களில் மணமகனும் மணமகளும் மிகவும் ஃபிரெண்ட்லி ஆக, வேடிக்கையாக காணப்படுகிறார்கள். டென்ஷன் எல்லாம் பெரும்பாலும் இருக்கவே இருக்காது.
திருமணத்துக்கு முந்தைய சடங்குகள், எப்படித் தயாராகிறோம் என்பது முதல் திருமண நிகழ்வுகளின் போது பதிவு செய்யப்பட்ட வேடிக்கையான காட்சிகளையும் திருமண தம்பதிகள் மற்றும் போட்டோகிராபர்கள் சோஷியல் மீடியாவில் பதிவு செய்வார்கள்.
மேலும், அப்போது வேடிக்கையான பல நிகழ்வுகள் ரசிக்கும்படி இணையதளத்தில் வெளியாகி வைரலாகும். அவ்வாறான ஒரு நிகழ்வு தன் சமீபத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் மணமகனைப் பார்த்து மணமகள் கேட்ட ஒரு கேள்வி தான்!
நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்? ஒவ்வொருவரும் திருமணம் செய்ய விரும்புவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.
சிலர் சீரியசாக பதில் சொல்வார்கள், சிலர் வேடிக்கையாக அல்லது நக்கலாக பதில் சொல்வார்கள். ஆனால், முகூர்த்த நேரத்தில், மண்டபத்தில் அமர்ந்துள்ள போது, மணமகனைப் பார்த்து அதிரடியாக ஒரு கேள்வி கேட்டார் மணமகள். “அது ஏன் என்ன பாத்து அப்படி கேட்ட?” என்ற வகையிலான ஒரு கேள்வி!
நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பகிரப்படும் இந்த வீடியோவில் மண்டபத்தில் அமர்ந்து இருக்கும் மணமகன் மற்றும் மணமகள் இடையே நகைச்சுவையான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவில் மணமகனை பார்த்து மணப்பெண் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளார்! இந்த அதிரடி கேள்விக்கும் மணமகனும் விளையாட்டாக “நான் நிம்மதியாக இருக்க விரும்பவில்லை” என்று பதில் சொல்லி இருக்கிறார்.
திருமண தம்பதிகளை மட்டுமில்லாமல் சுற்றியிருக்கும் அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
மணமகனின் பதிலை வேடிக்கையாக எடுத்துக்கொண்ட மணப்பெண் மற்றும் அவரின் ரியாக்சன் இந்த உரையாடலை மிகவும் க்யூட்டாக மாற்றியுள்ளது.
ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்த இந்த வீடியோவில், நெட்டிசங்கள் கிட்டத்தட்ட ஸ்பாம் செய்யுமளவுக்கு எக்கச்சக்கமான எமொஜிகளையும் கமெண்ட்டுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அதில் “அதே காரணத்துக்காகத் தான் நானும் திருமணம் செய்தேன்” என்று வேடிக்கையாக பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.