
- திருமலையில் மீண்டும் ஒரு சிறந்த நிகழ்ச்சி தொடக்கம்.
- ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு வரம்.
ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவின்பேரில் புத்தாண்டில் கல்யாணமஸ்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க இருப்பதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.
ஏழைப் பெற்றோர் பெண்களின் திருமணத்திற்காக கடன் வாங்கி சிரமப்படாமல் ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமியின் அருளோடு திருமணம் புரிவதற்கு புத்தாண்டில் கல்யாணமஸ்து நிகழ்ச்சியை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்..
இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு உடை, மாங்கல்யம் கொடுப்பதோடு இரு வீட்டாருக்கும் போஜனம் கூட ஏற்பாடு செய்யப் போவதாக தெரிவித்தார். திருமலா ஆஸ்தான மண்டபத்தில் வியாழக்கிழமை நடத்திய ஸ்ரீவாரி சேவகர்களின் கூட்டத்தில் சேர்மன் பங்கு கொண்டார். அப்போது சுப்பா ரெட்டி உரையாடுகையில் மானவ சேவையே மாதவ சேவை என்ற கொள்கையை ஊக்கமாகக் கொண்டு 2000 ஆண்டு நவம்பரில் ஸ்வர்கீய காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைகளால் ஶ்ரீவாரி சேவையைத் தொடங்கினோம் என்றார். 200 பேரோடு தொடங்கிய ஸ்ரீவாரி சேவையில் 20 ஆண்டுகளில் சேவை அளித்த 12 லட்சம் சேவகர்களுக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
கோவிட் பின்னணியில் சேவைக்காக வந்த சேவகர்கள் திருமலையோடு கூட அனைத்து உள்ளூர் ஆலயங்களிலும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து கைகளை சுத்தம் செய்து கொண்டு பக்தர்கள் கூட இவைகளை கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும் என்று கோரினார்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் டிடிடி நாடு முழுவதும் பெரிய அளவில் ஹிந்து தர்ம பிரச்சாரம் செய்து வருகிறது என்றார். இதில் ஒரு பகுதியாக 2 தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள எஸ்சி எஸ்டி பிசி காலனிகளில் 500 கோவில்கள் கட்டப் போவதாக அறிவித்தார். கோவிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பசு மாடுகளை வளர்க்கக்கூடிய ஆலயங்களுக்கு பசு மாடுகளை அளித்து வருவதாக கூறினார்.
திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈஓ டாக்டர் கே எஸ் ஜவஹர்ரெட்டி பேசுகையில் ஸ்ரீவாரி சேவகர்கள் கோவிட் 19 நிபந்தனைகளைக் கடைபிடித்து பக்தர்களுக்கு கூட இதுகுறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்று கோரினார். மாஸ்க் அணியாதவர்களுக்கு விவரமாக எடுத்துக் கூற வேண்டும் என்றும் கியூ வரிசையோடு கூட பிற இடங்களிலும் பௌதிக தூரம் கடைபிடிக்கும்படியாகவும் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் படியாகவும் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.