கோயில் சிலைகளை உடைத்த நபரை தே.பா. சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

நெல்லை
tenkasi hindu munnani protest
tenkasi hindu munnani protest

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், கோவில் சிலைகளை உடைத்த ரகுமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நகர தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் BJP மாவட்ட தலைவர் ராமராஜா ஆகியோர் பங்கேற்று பேசின.ர்

இந்து முன்னணி வக்கீல் அணி மாநில துணைத்தலைவர் சாக்ரட்டீஸ் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து குளத்தூரான் BJP நகரத் தலைவர் அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.