நம் எதிரி: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar
bharathi theerthar

மனிதன் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பகவான் சொன்னார்.

“உன்னுடைய சிரேயஸ் உன்னால்தான் ஆக வேண்டும். வேறு யாரோ நம் சிரேயஸ்ஸிற்காக என்னவோ செய்யப் போகிறார் என்று நினைப்பது தவறு.”

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத் I
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: II

உங்களுடைய சிரேயஸ் உங்களிடம் நான் இருக்கிறது. நீங்கள் சரியான மார்க்கத்திலே நடந்தால் உங்களுக்கு சிரேயஸ் உண்டாகும். நீங்கள் தப்பு வழியில் போனால் உங்களுக்குத்தான் அசிரேயஸ்,

யாரோ இன்னொருத்தன் எனக்கென்னவோ செய்கிறான் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய ஸ்ரேயோ மார்க்கத்தை அனுசரித்தால் உங்களுக்கு நீங்கள் பந்து. நீங்கள் தப்பு வழியில் போனால் உங்களுக்கு நீங்கள்தான் சத்ரு.

நமக்கு நாமேதான் பந்து. நமக்கு நாமேதான் சத்ரு. ஆனால், வெளியில் நிறைய சத்ருக்கள் இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம்.

அப்படி யாரும் கிடையாது. நம்முடைய சிரேயஸ்ஸிற்கு விரோதமான காரியங்களைப் பண்ணிக்கொண்டு இருந்தால் நாமே நமக்கு சத்ரு ஆகிவிடுவோம்.

ஆகையால் எல்லோரும் சிரேயோக்தமான காரியங்களை ஆச்ரயித்து தங்களுடைய ஜீவனத்தை பவித்ரமாக்கிக்கொள்ள வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.