அன்று: மகளாய் உடன் பயணித்தவள்.. இன்று: சக விமானியாய்..! தந்தை பெருமிதம்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
dad daughter
dad daughter

நெதர்லாந்து நாட்டின் ஹாக்ஸ்பெர்கன் பகுதியைச் சேர்ந்தவர் பார்ட் வுட்மேன். இவர் அந்த நாட்டின் கே.எல்.எம் விமான சேவை நிறுவனத்தில் விமான ஓட்டியாகப் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு லிசா வுட்மேன் என்கிற மகள் உள்ளார். தற்போது 23 வயதாகும் லிசா தனது அப்பாவைப் போலவே தானும் விமான ஓட்டி சீருடை அணிந்து விமானத்தில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

புகைப்படத்தின் பின்னணி என்ன?
2001ல் லிசா சிறுமியாக இருந்த போது அப்பா விமான ஓட்ட அவர் அருகில் இவரும் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

19 வருடங்களுக்குப் பிறகு லிசா விமான ஓட்டிப் பயிற்சி முடித்த பின் இரண்டாவது விமான ஓட்டியாகத் தனது அப்பாவுடன் அதே விமானத்தில் அதே இடத்தில் அமர்ந்தபடி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

19 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

புகைப்படத்தில், லிசா சிரித்தப்படி இருக்க…விமான ஓட்டி இருக்கையில் பூரிப்புடன் அமர்ந்திருக்கிறார் பார்ட் வுட்மேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.