சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து!

சற்றுமுன் தமிழகம்
gas
gas

சேலம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டமாகின. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.

தீயணைப்புத்துறை ஊழியர் பத்மநாபன் வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டமானது.

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் இன்று சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இந்த விபத்தினால் அருகில் இருந்த 5 வீடுகள் தரைமட்டம் ஆனது. அத்துடன் இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் 7 க்கும் மேற்பட்டோர் விபத்து பகுதியில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

https://twitter.com/hashtag/Salem?src=hash&ref_src=twsrc%5Etfw

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.