விவசாயக் கூலிக்கு 12 கோடி ரூபாய் லாட்டரி விழுந்தது.எனக்கு இன்னும் கையில் பணம் வரவில்லை. எப்போது வரும் என்று வங்கியிலிருந்து இன்னும் செய்தி வரவில்லை என்று கொஞ்சம் டென்ஷனோடு கூறினார் பெருன்னன் ராஜன்.
ராஜனின் வயது 58. அவருக்கு கேரளாவில் உள்ள கன்னூரு. விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார். இப்போது அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் வங்கியில் இருந்து பணம் எப்போது வரும் என்பதே. அது சிறிய தொகை அல்ல. 12 கோடி ரூபாய்.
கேரள அரசு லாட்டரி ஸ்கீமில் அவர் டிக்கெட் வாங்கினார். கிறிஸ்மஸ் லாட்டரியில் அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு 12 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்தது. வரி எல்லாம் போக ரூ7.2 கோடி பெறப்போகிறார். ஒரேயடியாக இத்தனை அளவு பணம் வருவதால் பிடிக்க முடியாத ஆனந்தத்தில் காணப்பட்டார்.
ஒரு பேங்கில் அஞ்சு லட்சம் கடன் உள்ளது. இன்னொரு வங்கியில் கூட கடன் வாங்கியுள்ளேன். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். முதலில் அவற்றை எல்லாம் தீர்க்க வேண்டும் என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
லாட்டரியில் விழுந்த வெற்றிப் பணத்தால் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் அதைப்பற்றி எதுவும் யோசிக்கவில்லை. முதலில் கடன்களை தீர்க்க வேண்டும். பணத்தை என்ன செய்வதென்று பிறகு நிதானமாக யோசிப்பேன் என்று பதில் கூறினார்.
மாலூரிலுள்ள தோலம்பரா என்ற இடத்தில் விவசாய கூலியாக வேலை பார்க்கிறார். இது மலைவாழ் மக்கள் வாழும் இடம். லாட்டரி வெற்றி பெற்ற விஷயம் தனக்கு தெரிந்த உடன் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன் என்று அந்த நேரத்தை நினைவுகூர்ந்தார்.
லாட்டரி அடித்தது என்று தெரிந்தவுடனே எங்கள் குடும்பத்தில் அனைவரும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தோம். உண்மையாகவே எங்களுக்கு லாட்டரி கிடைத்ததா இல்லையா என்று அறிவதற்கு வங்கிக்குப் போனோம் என்றார். ராஜனின் மனைவி ரஜனி, மகள் அக்ஷரா, மகன் ரிஜில் கூட அவருடன் வங்கிகுச் சென்றார்கள்.
தினமும் 5 டிக்கெட்டுகள் வாங்குவது ராஜனின் பழக்கம். தோலாம்பரா co-operative சொசைட்டி பங்க் செகரிடி தாமோதர் கூறினார், “எங்களிடம் வந்த போது அவர் கொஞ்சம் டென்ஷனாக காணப்பட்டார். தனக்கு லாட்டரி சீட்டு விழுந்துவிட்டது.
பணம் எப்போது வரும் என்று கேட்டார். பேங்குக்கு அடிக்கடி வருவார். ஒருமுறை ரூ 50,000 கடன் வாங்கியிருந்தார். இன்னொருமுறை ரூ25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அவ்வப்போது பணத்தை செலுத்துவதற்கான வந்து போய்க் கொண்டிருப்பார். இதுவரை அவருக்கு மூன்று முறை 500 ரூபாய் லாட்டரி விழுந்திருக்கிறது”.
கேரளாவில் விவசாய கூலிகளுக்கு 800 ரூபாய் வரை கூலிப் பணம் கிடைக்கிறது. ராஜனின் மனைவி ரஜனி அண்டை வீடுகளில் வேலை செய்கிறார். மூன்று குழந்தைகள். அதில் இருவர் பட்டப்படிப்பு படித்து உள்ளார்கள். பெரிய பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது . மகன் ரிஜில் ராஜனோடு சேர்ந்து விவசாய வேலை பார்க்கிறார். சிறிய பெண் அக்ஷரா ஹை ஸ்கூலில் படித்து வருகிறார்.