ஆரியங்காவு பாலருவி, இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள கேரள மாநில சுற்றுலாத்தலமான ஆரியங்காவு பாலருவி, இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகிறது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், அருவிக்கு நீர்வரத்து குறைந்தளவிலேயே உள்ளது. மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அருவி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது ஜூன் முதல் வாரத்தில் அருவி திறக்கப்படும் என தெரிகிறது. அருவி மூடப்படும் இந்த 4 மாத காலத்தில் அருவிக்கு செல்லும் பாதைகள் மற்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆரியங்காவு பாலருவி, கேரள அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.