மைசூர் மாவட்டம் யமகும்பா பகுதியை சேர்ந்தவர் சிந்துஸ்ரீ. இவர் சச்சின் என்பவரை காதலித்தார். இருவரும் ஒரே ஊர்தான். ஆனால் சிந்து வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
அதனால் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்தனர். அதன்படி நேற்றுதான் திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்து, ஊரெல்லாம் பத்திரிகை தந்தாயிற்று.
இதனால் விஷயத்தை சச்சினுக்கு கூறினார் சிந்து. கண்டிப்பாக இவர்கள் நமக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள், அதனால் இறந்து விடலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.
இதையடுத்து காதலர் தினத்தன்று குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு இருவரும் சென்றனர். அந்த பகுதி முழுவதும் சுற்றி பார்த்தனர். மொத்த வாழ்நாளையும் ஒரே நாளில் வாழ்ந்துவிட வேண்டும் என்ற துடிப்புடனும், ஒரு பொழுது வாழ்ந்தாலும் மனம் இணைந்த வாழ்வு என்ற நிறைவுடனும், அவர்கள் இயற்கையோடு இணைந்தனர்.
இறுதியில் நீர்தேக்க பகுதியில் நின்று கொண்டு இருவரும் ஜோடியாக குதித்துவிட்டனர்.
இதை பார்த்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் உடனடியாக தீயணைப்பு துறை, காவல்துறைக்கும் தகவல் கூறினார்கள். விரைந்து வந்த அவர்கள் இருவரின் சடலத்தை தேடியும் உடனடியாக கிடைக்கவில்லை.
ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு சடலங்கள் மீட்கப்பட்டன. இரு குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. இரு சடலங்களையும் கட்டிப்பிடிதது கொண்டு இரு குடும்பத்ரும் கதறி அழுதனர்.
உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டேமை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இந்த சம்பத்தினால் நிலைகுலைந்து போயினர். இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.