இலங்கையில் இருந்து பைபர் படகில் தனுஷ்கோடிக்கு கடத்த முயன்ற ரூ.5.40 கோடி மதிப்புள்ள 14 கிலோ 35 கிராம் தங்கத்தை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நெடுந்தீவு அருகே பைபர் படகில் கடத்த முயன்ற யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், யாழ்ப்பாணத்தில் மக்களின் நகைகளை திருடும் கும்பலிடம் இருந்து நகைகளை விலைக்கு வாங்கி, பின்னர் அதனை உருக்கி கட்டிகளாக மாற்றி அதனை சென்னையில் வியாபாரியிடம் தரவிருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.