- கண நேரத்தில் ஆபத்திலிருந்து தப்பிய விமானம்
- டேக்ஆஃப் நேரத்தில் ரன்வேயில் வேகமாகப் புகுந்த ஜீப்
- பழுதடைந்த ஏர்இந்தியா விமான பாகம்
பூனே விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கண்மூடித் திறக்கும் நேரத்தில் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது.
ரன்வேயில் இருந்து டேகாஃப் எடுக்கும் சமயத்தில் திடீரென்று ஒரு ஜீப் ரன்வேக்குள் புகுந்தது. அதிலிருந்து தப்பிப்பதற்காக பைலட் திடீரென்று விமானத்தை உயரே கிளப்பினார். அதனால் விமானத்தில் இருக்கும் முக்கியமான பாகம் பழுதடைந்தது.
ஏர் இந்தியா விமானம் ஏ321 பூணே விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை கிளம்பியது.
இந்த சம்பவம் நடந்த பின்னும் பைலட் விமானத்தை அப்படியே பறக்கச் செய்து நேராக டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கினார்.
ரன்வேயில் இருந்து 120 நாட்ஸ் வேகத்தோடு பைலட் விமானத்தை நடத்திச் சென்ற போது ஒரேடியாக திடீரென்று ரன்வே மீது ஒரு மனிதர் ஜீப்பை ஓட்டி வந்ததால் விமானம் டேக் ஆப் எடுக்கும் சாதாரண நேரத்தை விட முன்பாகவே காற்றில் பறந்தது. அதனால் அந்த விமானத்திற்கு பழுது நேர்ந்தது என்று டிஜிசிஏ தெரிவித்தது.
இது இப்படி இருக்கையில் இந்த சம்பவத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று அறிந்து கொள்வதற்காக காக்பிட்டில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டரை எடுத்து சப்மிட் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள்.
இனி விமான சம்பவம் பற்றி விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் இந்த விமானத்தின் சர்வீஸ்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பூணே ஏடிசி யோடு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி அறிக்கை வெளியிட வேண்டும் என்று அமைப்பு கோரியுள்ளது.
அதுமட்டுமன்றி ரன்வே மீது தடயங்களைக் கூட பார்வையிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
பூணேயில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஏ321க்கு ஆபத்து நேர்ந்தால் முக்கியமான ஒரு பாகம் பாழடைந்த தென்று ஏர் இந்தியா பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். பூணேயில் இருந்து இந்த விமானம் டெல்லிக்கு வந்தது என்று தெரிவித்தார். இனி இந்த விமானத்தின் சர்வீஸ்களை ரத்து செய்வதாக கூறினார்.
அதுமட்டுமின்றி காப்பீட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் சாலிட் ஸ்டேட் பிளைட் டேட்டா ரெக்கார்டர் களையும் பார்வையிட வேண்டும் என்றும் பார்வையிட்ட பின்பு ஆபத்து குறித்தான பூர்த்தி விவரங்கள் தெரியவரும் என்றும் ஏர்இந்தியா பிரதிநிதி கூறினார்.