சேகர் பாபு அண்ணாச்சி… கோவில் சொத்து மண்ணாச்சி!

அடடே... அப்படியா? நெல்லை புகார் பெட்டி
courtallam temple - 2026

குற்றாலநாத சுவாமி கோவில் இடத்தில் ஜெபக்கூடம் கிறிஸ்தவ வணிக வளாகம்

ஆளுங்கட்சி பிரமுகர் துணையோடு அறநிலையத்துறை உறக்கம்

நாளை கட்டிட திறப்பு விழா இந்து முன்னணி போராட்டம்

தென்காசி மாவட்டம் அருள்மிகு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் ஒரு ஏக்கர் பாவூர்சத்திரத்தில் உள்ளது. இது கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்து அதில் சட்டவிரோத ஜெபக்கூடம் மற்றும் வணிக வளாகம் கட்ட முயற்சி செய்தனர்

இந்து முன்னணி புகாரின்பேரில் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி வணிக வளாகத்தை திறக்க அனுமதிக்கவில்லை

மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்காமல் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில்

தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் தனது அதிகார பலத்தால் நாளை காலை 8 மணி அளவில் வணிக வளாகத்தை திறக்க வருகிறார்

காவல்துறையும் வருவாய்த் துறையும் உடனடியாக வணிக வளாகம் திறப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி சார்பாக புதிய கட்டிடம் முன்பு நாளை மறியல் போராட்டம் காலை 8 மணி அளவில் பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில்

சேகர்பாபு அண்ணாச்சி… ஆளுங்கட்சி அதிகார பலத்தால் கோவில் சொத்து மண்ணாச்சு..!

சிவன் சொத்தை மீட்போம்! புண்ணியம் பெறுவோம்!
போராட வாரீர்! அழைக்கிறது!
இந்துமுன்னணி, தென்காசி மாவட்டம்

  • கா. குற்றாலநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.