
உலகின் பாதுகாப்பிற்கு ஆதாரமாக விளங்கும் காடுகளில் சிங்கம், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் பல அரியவகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்த விலங்குகளையும், பறவைகளையும், உயிரினங்களையும் காடுகளுக்குள் சென்று மக்கள் சுற்றிப்பார்ப்பதற்காக அந்தந்த நாட்டு வனத்துறையினர் டிரெக்கிங் உள்ளிட்ட சுற்றுலா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், எட்வர்ட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், சுற்றுலா பயணிகள் சிலர் திறந்தவெளி பெரிய ஜீப் ஒன்றில் காட்டிற்குள் சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் எதிரே வந்த பெரிய யானை ஒன்று அந்த ஜீப்பை ஆவேசமாக மோதி இடிக்கிறது. இதனால், பதறிப்போன சுற்றுலா பயணிகள் அலறிக்கொண்டே ஜீப்பில் இருந்து தப்பிதது கீழே ஓடினர்.
தப்பித்து ஓடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் அருகே இருந்த மற்றொரு ஜீப்பில் ஏறி தப்பித்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காடுகளில் நடக்கும் சில சுவாரசிய சம்பவங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் உடனே எழுத்து ஓட்டம் பிடிக்கின்றனர். நல்லவேளையாக யானை யாரையும் காயப்படுத்த வில்லை. உயிர்சேதம் ஏதும் இல்லை. இவை அனைத்தையும் பின்னல் இருந்த வாகனத்தில் வந்தவர்கள் சற்று தூரம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டு உள்ளனர்.
இந்த வீடியோ குறித்த தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி அவர்கள் அதிஷ்ட சாலிகள். எனினும் அனைத்து நேரங்களிலும் அதிர்ஷ்டம் வேலை செய்யாது. காடுகளை மதிப்போம். எப்போதும் பாதுகாப்பான தூரம் தள்ளி நிற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.