சொட்டத் தலைல முடி… கருகரு கூந்தல்… மலடாயிருந்தாலும் பிள்ளை பொறக்கும்.. -இப்டில்லாம் விளம்பரம் செய்தா.. இதான் தண்டனை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
Dharma Prabhu Tamil Movie3 - 2026

கிரீம்கள் மூலம் தோலை வெள்ளையாக்குவதாக விளம்பரம் செய்தால் 5 ஆண்டு சிறை, 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது.

மருந்துகள் மற்றும் மாய நிவாரணங்கள் தொடர்பாக, ஆட்சேபணைக்குரிய விளம்பரங்களை தடை செய்யும் சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

78 வகையான நோய்கள், குறைபாடுகளை சரிசெய்வதாகக் கூறி மருந்துகள், மாய நிவாரணங்கள் மற்றும் தயாரிப்புகளை விளம்பரம் செய்வது இந்த சட்டம் தடை செய்கிறது. இந்த தடைப் பட்டியலில் தோலை வெள்ளையாக்குவது, பாலுறவு திறனை அதிகரிப்பது, திக்குவாய் மற்றும் பெண்களுக்கு மலட்டுத் தன்மையை குணப்படுத்துவது, முடியை பழுப்பு நிறமாக மாற்றுவது தொடர்பான விளம்பரங்களும் சேர்க்கப் படுகின்றன.

மேலும் இத்தகைய விளம்பரங்களை செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.