சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
sweet potato - 2026

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்

தேவையானப் பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 250கி
பெரிய வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 தேக்க்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
ஆம்ச்சூர் பவுடர் -3 சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய் – 20மில்லி லிட்டர்

செய்முறை:

sweet potato varuval - 2026

சர்க்கரை வள்ளிக்கிழங்கை குழையாமல் வேக வைக்க வேண்டும் கிழங்கை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிழங்கு துண்டுகளை போட்டு சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ளவும்

வாணலியில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்

அதன்பின் பொரித்து வைத்துள்ள கிழங்கு துண்டுகள் தனியாத்தூள் மிளகாய்த்தூள் ஆம்ச்சூர் பவுடர் மஞ்சள் தூள் உப்புத்தூள் இவற்றைப் போடு மிதமான தீயில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கி இறக்கி பரிமாறவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.