தமிழ்நாட்டில் முதன் முறையாக வளர்ப்பு பிராணிகளுக்கு எரிவாயு தகனமேடை!

Published:

Cremation platform
Cremation platform

தங்கள் வீட்டில் ஒரு நபராகவே கருதி செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அப்படி தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினராகவே இருந்து வளர்ந்து அந்த செல்லப்பிராணி உயிரிழந்துவிட்டால் மற்றவர்களைப் போல் குப்பைத்தொட்டியில் வீசிவிடுவதில்லை.

சாக்கடையில், தெருவோரங்களில் வீசி சென்றுவிட அவர்களுக்கு மனம் இருக்காது.

மனிதர்களை அடக்கம் செய்வது போலவே தங்கள் செல்ல பிராணிக்கும் அடக்கம் செய்யவேண்டும் இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்று அவர்கள் நினைப்பது உண்டு.

மனிதர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போலவே பாடைகட்டி, பல்லக்கில் சுமந்து இறுதி ஊர்வலம் சென்று தங்கள் செல்லப்பிராணிகளை அடக்கம் செய்யும், எரிக்கும் பழக்கம் இருக்கிறது.

இன்னும் சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கூட தங்கள் செல்லப்பிராணியின் இறுதிச் சடங்கை நடத்துகின்றனர்.

கிராமத்தில் இருப்பவருக்கு இது வசதியாக போய்விடுகிறது. தங்கள் செல்லப்பிராணிகளை புதைக்கவும் எரிக்கவும் வசதி இருக்கிறது.

நகர்ப்புறங்களை உள்ளவர்களுக்கு இது சிரமமானதாக இருக்கிறது. அவர்கள் புதைக்கவோ எரிக்கவோ இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் . அதேநேரம் சாலையோரத்தில் குப்பையில் இறந்துபோன தங்கள் செல்லப்பிராணிகளை வீசி விடவும் மனம் இன்றி தவிக்கிறார்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இதனால் 400, 500 கிலோ மீட்டர் தாண்டி தனி டெம்போ வாகனத்தில் எடுத்துச் சென்ற கூட அடக்கம் செய்யும் நிலை இருக்கிறது.

சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் வேனில் தங்கள் செல்லப்பிராணிகளை எடுத்துச்சென்று அடக்கம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்காக இவர்களின் செல்லப்பிராணிகளுக்கு இறுதி அடக்கம் செய்ய மனிதர்களுக்கு போலவே தகன மேடை சென்னையில் அமைந்திருக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள ப்ளூகிராஸ் விலங்குகள் நல அமைப்பு சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் விலங்குகளுக்காக தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு தகனமேடை ஆகும்.

இந்த ப்ளூ கிராஸ் 1964ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு. விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் ப்ளு கிராசில் மேலும் ஒரு மைல்கல்லாக விலங்குகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இது விலங்குகள் நல ஆர்வலர் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img