இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான திருமண வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
பானி பூரி இந்தியாவில் பலருக்கும் மிகவும் பிடித்த தெரு உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது கோல்கப்பா என்றும் அழைக்கப்படுகின்றது. இவற்றை பார்த்து விட்டால், சாப்பிடாமல் நம்மை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் கடினமாகும்.
பல கடைகளில் பலர் கோல்கப்பா சாப்பிட வரிசையில் நிற்பதை பார்த்துள்ளோம். பெண்கள், குறிப்பாக பானி பூரியை விரும்பி உண்கிறார்கள். தற்போது வைரலாகி (Viral Video) வரும் ஒரு வீடியோ அதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவில், திருமண சடங்குகள் முடிந்ததும் ஒரு புது மணப்பெண் சுவையான இந்த பானி பூரியை ருசிப்பதைக் காண முடிகின்றது.
இந்த வீடியோவில், திருமணத்திற்குப் பிறகு மணமகனும், மணமகளும் பானி பூரி சாப்பிடக் காத்திருப்பதை காண முடிகின்றது. திருமண சடங்குகள் அப்போதுதான் முடிந்துள்ள நிலையில், அவர்களது பசியையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
பானி பூரி வழங்கப்பட்டவுடன், மணப்பெண் தன் கணவனிடம் “இது கோதுமை பூரி…எனக்கு இது வேண்டாம்” என்று கூறுகிறார். தனது கணவர் பானி பூரியை சாப்பிடும் வரை மணப்பெண் காத்திருக்கிறார்.
மணப்பெண்ணின் இனிமையான இந்த செல்லக் கோபம் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. சிறிது நேரம் கழித்து, அவர் ரவையாலான பூரியை ருசிக்கிறார்.
இந்த வீடியோவை மணமகளே (@imahimaagarwal) பகிர்ந்துள்ளார். அவர் பயணம் மற்றும் பேஷன் இன்ஃப்ளூயன்சராக உள்ளார். “எனக்கு பானி பூரி எவ்வளவு பிடிக்கும் என யாரும் @shreashth ஐ எச்சரிக்கவில்லை” என அந்த வீடியோவிற்கு அவர் வேடிக்கையாக தலைப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை தங்களோடு தொடர்பு படுத்திப்பார்க்கும் அனைவரும் இதைக் கண்டு மிகவும் மகிழ்கின்றனர். கமெண்ட் பிரிவில் ஹார்ட் மற்றும் லவ் எமோஜிக்கள் நிறைந்துள்ளன.
பல நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CXndJQpgEsu/?utm_source=ig_embed&utm_campaign=loading