போலீஸார் என்றாலே கெடுபிடி, முறைகேடு, அடாவடி என்ற எண்ணம் கொண்டிருக்கும் பொதுமக்களிடம், அந்த எண்ணத்தை மாற்றும் விதமாக ஒரு போக்குவரத்து எஸ்.ஐ., நடந்து கொண்டுள்ளார்.
வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் கோவை ஈ1 சிங்காநல்லூர் போக்குவரத்து எஸ்.ஐ., முருகன். அப்போது அவ் வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது, ஒருவரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தன. ஆனால், அவரிடம் இன்ஸூரன்ஸ் பேப்பர் மட்டும் இல்லை. அதுகுறித்து காவலர் முருகன் விசாரித்துள்ளார்.
அந்நேரம் தனது நிலையைச் சொன்ன அந்த நபர், தாம் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளி என்றும், காலாவதியான இன்ஸூரன்ஸை புதுப்பிக்க தம்மிடம் பணம் இல்லாமல் வறுமையில் வாடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மனம் இரங்கிய காவலர் முருகன், அவருக்கு 1250 ரூபாய்க்கு தனது கைகாசில் இன்ஸுரன்ஸ் எடுத்துக் கொடுத்தாராம்.
- செய்தி: கே.சி.கந்தசாமி




