லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கேஷ்யூ புலாவ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
cashu bulov - 2026

கேஷ்யூ புலாவ்
தேவையான பொருட்கள்
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்
முந்திரி – ஒரு கப்
வெங்காயம் – 2 -3
மிளகாய் தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
கரம் மசாலா – சிறிதளவு
சீரகப்பொடி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
வெண்ணெய் – சிறிது
பட்டை – சிறிதளவு
சீரகம் – சிறிது

செய்முறை
முந்திரியை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான பொடிகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பட்டை, சீரகம் தாளிக்கவும். பின் வெங்காயத்தை சேர்த்து மொறுமொறுவென ஆகும்படி வறுத்துக் கொள்ளவும்.

பிறகு எல்லா பொடிகளையும் போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதனுடன் வடித்த சாதம், வறுத்த முந்திரி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான கேஷ்யு புலாவ் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.