நாளை முதல்… ஸ்ரீசியாமளா நவராத்திரி!

Published:

shyamala devi - 2026

ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவது வழக்கம்.

சித்திரை மாதம் வசந்த நவராத்திரி, ஆனி மாதம் வாராகி நவராத்திரி, புரட்டாசி மாதம் சாரதா நவராத்திரி, தை மாதம் சியாமளா நவராத்திரி.

வசந்த நவராத்திரியும் சாரதா நவராத்திரியும் எல்லோருக்கும் தெரியும். மீதி இரண்டும் ‘குப்த’ நவராத்திரிகளாக (ரகசிய) அறியப் படுகின்றன.

இவற்றை பூஜை செய்யும் சம்பிரதாயம் இருப்பவர்கள் மட்டுமே அறிவர்.

சியாமளா நவராத்திரி இந்த ஆண்டு நாளை ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3 வரை கொண்டாடப்படுகிறது.

மூலமந்திர அனுஷ்டானம் இல்லாதவர்களும் கூட இந்த குப்த நவராத்திரிகளை கடைபிடிக்கலாம்.

சியாமளாதேவி லலிதா பரா பட்டாரிகாவின் மந்த்ரிணி.

இந்த தேவி தச மகா வித்யைகளில் மாதங்கி என்று அழைக்கப்படுகிறாள்.

சியாமளாவுக்கு நீல சரஸ்வதி, சுக சியாமளா, சாரிக ஷ்யாமளா, ராஜ மாதங்கி, லகு சியாமளா, கேய சக்ர வசினி என்று பல நாமங்கள் உள்ளன.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

ஷ்யாமளா ஷோடச நாமங்கள்:

  1. ஶ்ரீ சங்கீத யோகின்யை நம:
  2. ஶ்ரீ ஸ்யாமாயை நம:
  3. ஶ்ரீ ஷ்யாமளாயை நம:
  4. ஶ்ரீ மந்த்ர நாயிகாயை நம:
  5. ஶ்ரீ மந்திரிண்யை நம:
  6. ஶ்ரீ சசிவேசான்யை நம:
  7. ஶ்ரீ ப்ராணேஸ்யை நம:
  8. ஶ்ரீ சுக ப்ரியாயை நம:
  9. ஶ்ரீ வீணாவத்யை நம:
  10. ஶ்ரீ வைணிக்யை நம:
  11. ஶ்ரீ முத்ரிண்யை நம:
  12. ஶ்ரீ ப்ரியக ப்ரியாயை நம:
  13. ஶ்ரீ நீப ப்ரியாயை நம:
  14. ஶ்ரீ கதம்பேஸ்யை நம:
  15. ஶ்ரீ கதம்ப வன வாசின்யை நம:
  16. ஶ்ரீ சதாமதாயை நம:

இவற்றை தினமும் படித்து சியாமளா தேவியின் அருளால் சத் புத்தியும் வாக் சித்தியும் பெறுவோமாக!

இச்சா, ஞான, க்ரியா சக்திகளோடு கூடிய சிறப்பான ஞான ஸ்வரூபமே சியாமளா தேவி. இந்த ஒன்பது நாட்களும் நியமத்தோடு வழிபட்டு தேவியின் அருளைப் பெறுவோமாக!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img