பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
IMG 20200124 WA0064 - 2026

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த இரு ஆண்டுகளாக பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

IMG 20200124 WA0067 - 2026

இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், சந்தேகங்களைக் குறித்து கேட்டு அறிந்துகொள்கிறார்.

இந்த ஆண்டு பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சி டெல்லி யில் தால்கோட்ரா ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் டீம் இந்தியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், முன்னாள் கோச் அனில் கும்பளே தொடர்பான ஒரு சம்பவம் குறித்து குறிப்பிட்டார் பிரதமர்.

IMG 20200124 WA0064 - 2026

2002ல் டீம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு சென்றபோது ஒரு மேட்சில் அனில்கும்பளே தீவிரமாக காயமடைந்தார். அதனால் அவர் பௌலிங் செய்வாரா என்று அனைவரும் சந்தேகித்தனர். ஆனால் காயத்தை பொருட்படுத்தாமல் தலைக்கு பேண்டேஜ் கட்டிக்கொண்டு பௌலிங் செய்தார் கும்பளே. அதோடு வெஸ்ட் இண்டீஸ் ஹீரோவான பிரைன் லாராவின் விக்கெட்டை வீழ்த்தி மேட்சை திசை மாற்றினார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
IMG 20200124 WA0066 - 2026

இந்த செய்தியை மோடி மாணவர்களிடம் குறிப்பிட்டார்.

அதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்தார் கும்பளே. அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்து மாணவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் கூறினார் கும்பளே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.