தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

உரத்த சிந்தனை கட்டுரைகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20200124 WA0051 - 2026

இன்றைய தினமணியில்… முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி க்கும் நிர்வாண படங்கள் வந்தன ஆனால் அவை ஏன் தினமணியில் பிரசுரிக்கப் படவில்லை என்றால் கிடைக்கப்பட்ட படங்கள் தனி படங்களாக இருந்தன. அவை வண்டி களிலோ லாரியிலோ வைக்கப்பட்டிருந்த பாணியில் சுற்றிலும் இருந்த பொருட்களுடன் சேர்ந்து எடுக்கப்படாமல் தனி ஓவியமாக மட்டுமே கிடைத்தன

அதாவது background இல்லாமல் கிடைத்ததாக ANS சொல்கிறார். அவை நிகழ்ச்சி சித்திரங்களாக அல்லது செய்தி சித்திரங்களாக இல்லாமல் வெறும் ஓவியங்களாக இருந்தன.

தினமணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பற்றிய குறிப்பு இது. எனவேதான் தினமணி அப்படங்களைப் பிரசுரம் செய்யவில்லை. துக்ளக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது. படங்கள் பிரசுரம் ஆன பக்கத்தைக் கழட்டிவிட்டு துக்ளக் விற்பனையை மேற்கொள்ள முற்பட்டபோதும் அனுமதிக்கப்படவில்லை.

படங்கள் இல்லாத புதிய துக்ளக்கை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவாகும். சோ அவர்களுக்கு சில ஆயிரம் நஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம்.

அடுத்தவர் சிரிக்க அழுத வரை தண்டிக்கும் பாணியில் துக்ளக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஏ என்எஸ் கருதுகிறார். சோ விற்காக தினமணி ஆதரவுக் குரல் கொடுத்தது அந்தச் செய்தியைப் படித்தால் புரியும்!

  • கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர் – கலைமகள், மஞ்சரி)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.