செல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்! வழக்குப் பதிவு!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

aksharahaasan - 2026

நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்களை, அவரது செல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்டு விட்டதாக வந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன், இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷூம் இணைந்து நடித்த சமிதாப் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏர்படுத்தின. இதனிடையே தன் செல்போனை ஹேக் செய்த மர்மநபர்கள், தனது அந்தரங்க புகைப்படங்களைத் திருடி விட்டதாக அக்‌ஷரா ஹாசன் புகார் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அக்‌ஷரா ஹாசன் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்று, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், புகைப்படத்தை முதலில் வெளியிட்ட கணினியின் ஐபி முகவரியைக் கண்டறிய முயற்சி செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.