பயணிகளுக்காக இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு: மெட்ரோ!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
metro - 2026

சென்னையில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில்களில் மக்களை குதூகலப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் இன்றும், நாளையும் இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் , தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் கொண்டாடப்பட வேண்டும். மக்களை சென்றடைய வேண்டும்.

இதன் அடிப்படையில் சென்னை முழுவதும் உள்ள இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

விம்கோ நகர், வண்ணாரப்பேட்டை, உயர் நீதிமன்றம், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, கிண்டி, விமானநிலையம், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர், மண்ணடி, சென்ட்ரல் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மெல்லிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில் நிலையங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.