December 6, 2025, 1:10 PM
29 C
Chennai

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு! அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!

teacher-3
teacher-3

அரசு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போது மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1-ம் தேதி ஆசிரியர்கள் – மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள தகவலின் அடிப்படையிலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அதிக ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.

பொது மாறுதல் கலந்தாய்வில் 100 % பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியர்கள், 40 % பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆசிரியர்கள், டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கலாம்.

விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கலாம். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 8 ஆண்டு கட்டாயம் ஒரு இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

அதன் பின்னர் அவர்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். நிர்வாக மாறுதல் போடுவதற்கு அந்தத் துறை அலுவலர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

அலகு விட்டு அலகு மாறுதல் ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்குரிய தடையின்மைச் சான்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் முன்னுரிமை கல்வி ஒன்றியங்களில் கட்டாயம் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர், மூன்றாண்டுகள் வேறு கல்வி ஒன்றியங்களில் பணி புரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories