சிலை இடிப்பு அரசியல் விவகாரத்தில், பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு ஆதரவாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பெரியார் சிலை இடிப்பு கருத்தும், தொடர்ந்து, மயிலாப்பூரில் திராவிடர் கழக குடும்ப அமைப்பினர் நடத்திய பூணூல் அறுப்பு அரசியலும் பலரின் நெஞ்சங்களில் அமிழ்ந்து கிடக்கும் உணர்வுகளைக் கொட்டிக் காட்டச் செய்துள்ளன. வாட்ஸ் அப்பில் வலம் வரும் அப்படியான ஒரு கருத்து இது..
வலியின் வேதனையை உணர்ந்தால் தான் புரியும் என்பதை இந்து விரோதிகளுக்கு உணர்த்தி இருக்கிறார் ஹெச்.ராஜா.
சிவன் கோவில்களையும் பெருமாள் கோவில்களையும் இடித்துவிட்டு பௌத்த விஹார்களை கட்டவேண்டும் என்று திருமாளவன் சொன்னபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
சிவனையும் பார்வதிதேவியையும் சீமான் இழித்தும் பழித்தும் பேசியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
தாலி அறுப்புப் போராட்டத்தையும் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தையும் கி.வீரமணி நடத்தியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
தாலி தேவையா? இல்லையா? என புதிய தொலைக்காட்சி நிறுவனம் விவாத நிகழ்ச்சி ஒன்றை அறிவித்த போது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
திமுக ஆட்சி காலங்களில் சாலை விரிவாக்கம் என்கிற பெயரிலும் அரசு அலுவலகங்கள் கட்டுமானம் என்கிற பெயரிலும் தமிழகம் முழுவதும் எண்ணிலடங்காத கோவில்களை இடித்துத் தள்ளியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
கற்பு குறித்து கேவலமாக குஷ்பு பேசியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது திமுகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்று சொல்லிவிட்டு இஸ்லாமிய கிறிஸ்தவ மத பண்டிகைகளுக்கு மட்டும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
இஸ்லாமியர்கள் ஷிர்க் ஒழிப்பு என்கிற பெயரில் இந்து இறை வழிபாட்டை அழிப்பதற்காக மாநாடு நடத்தியபோது தமிழக அரசியல் தலைவர்கள் அதைத் தட்டிக் கேட்காமல் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
ஆண்டாள் நாச்சியாரை தேவசாசி என வைரமுத்து இகழ்ந்துரைத்த போது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
திருப்பதி கோவிலில் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்று ஏளனம் செய்து திமுகவினர் யாரும் நெற்றியில் திலகம் வைக்கக்கூடாது என கனிமொழி பேசியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
இந்து முன்னணி தலைவர்களும் பாஜக நிர்வாகிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக தமிழக அரசியல் கட்சிகள் படுகொலைகளை வேடிக்கை பார்த்தபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
இந்து கோவில்களில் ஐம்பொன் சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருடி விற்றபோது அதைத் தடுக்காமல் தமிழக அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்த்தபோது இந்தக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
இந்து பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களை செக்ஸ் அடிமைகளாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் விற்பனை செய்யும் அவலம் நடந்தேறும் போதெல்லாம் இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிற்கும்?
கிறிஸ்தவர்கள் ஏழை இந்துக்களை ஆசை வார்த்தை காட்டி மூளைச்சலவை செய்து மதம் மாற்றி இந்து விரோதத்தில் ஈடுபடும் போதெல்லாம் இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
கருணை இல்லம் என்கிற பெயரில் ஆதரவற்ற இந்து முதியோர்களை அழைத்து வந்து பட்டினி போட்டு அவர்களை படுகொலை செய்து எலும்புகளை திருடி கிறிஸ்தவ மெஷினரிகள் விற்பது தெரிந்த போது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
நாத்திக மாநாடு என்கிற பெயரில் இந்து இறைவழிபாடு எதி்ப்பு மாநாட்டை கி.வீரமணி நடத்திய போது அதை தடுத்து நிறுத்தாமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழக அரசியல் தலைவர்கள் அதை வேடிக்கை பார்த்தபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?
இந்துக்களுக்கு பாதிப்பு வரும்போதெல்லாம் அந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருந்துவிட்டு குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட முன்வராத ஸ்டாலின்! வைகோ! சீமான்! வீரமணி! கொளத்தூர்மணி! சுபவீ! குஷ்பு! திருமுருகன் காந்தி! கனிமொழி! தாமஸ் பாண்டியன்! டேனிமல் ராஜா! வைரமுத்து! பழ.கருப்பையா! ஜவாஹிருல்லாஹ்! உள்ளிட்ட இந்து விரோதிகள் அனைவரும் …
இந்தியாவிற்கு சற்றும் தொடர்பில்லாத அந்நிய ரஷ்ய லெனின் சிலை திரிபுராவில் அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் சாதி வெறியன் ஈவெரா சிலை … என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போடுவது ஏன்?
ஈவெராவை சொன்னவுடன் உங்கள் மனம் ஆற்றாமையில் பதபதைக்கிறதே அதுபோலத்தானே இதுநாள் வரையிலும் உங்களால் இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்!
இந்துக்களின் மனவேதனையும் இதய ரணமும் எப்படி இருக்கும் என்று திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் உங்களுக்கு ஈவெரா விஷயத்தை மேற்கோள் காட்டி உணர்த்தி இருக்கிறார் அவ்வளவுதான்…
ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் உணர்வுகளின் வெளிப்பாடே திரு.ஹெச்.ராஜா ஜி…



