spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஈரோட்டுக்காரரின் போலி முகத்தை வெளுத்து வாங்கிய உண்மை கம்யூனிஸ்ட் ஜீவா

ஈரோட்டுக்காரரின் போலி முகத்தை வெளுத்து வாங்கிய உண்மை கம்யூனிஸ்ட் ஜீவா

சிலை அரசியல் தலை தூக்கியுள்ள இந்நாளில், ஈ.வே.ரா. பெரியார் சிலை ஒரு நாளில் இங்கும் அகற்றப் படும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு கொதிப்படைந்து போய் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அரசியல் கட்சியினரும் ஊடகத்தினரும்.

இந்நிலையில்,  ஹெச். ராஜா ஈவேரா சிலை அகற்றச் சொன்னதற்குக் கொதிப்பவர்கள், ஈவேரா வை ப.ஜீவானந்தம் கிழிகிழின்னு கிழிக்கறதையும் படிக்கணும்! என்று ஜீவா குறித்த பதிவுகள் இப்போது வைரலாகி வருகின்றன. ஈ.வே.ரா.. பெரியார் குறித்து அந்தக் காலத்தில் என்ன சொன்னார்கள் என்பதை இந்தக் கால இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துகளை பதிவிடுகிறார்கள். அவற்றில் ஒன்று…

“அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர். பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான “நான் நாஸ்திகன் ஏன்?”- பற்றி பிரச்னை வந்தது. இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு!

periyar on communism stay away from communism e1520530816957

வெளியிட்டவர் என்பதற்காக ஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். ‘சுயமரியாதை இயக்கத்தின்’ மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது. அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி. தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை.

சர்க்கார் அழிவு நடவடிக்கையைக் கண்டு ஈவேரா மிரண்டார். சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள் தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர். ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்.

என்னை மானங்கெட்டத் தனமாக, மன்னிப்புக் கொடுத்துவிட்டு வெளியே வரும்படி, ஈவேரா, K M பாலசுப்ரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப் படுத்தினார். ”பெரிய நாயக்கர் (ஈ வே கிருஷ்ணசாமி) வேண்டுமானால் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டுப் போகட்டும்: நான் முடியாது”- என்று பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று ‘குடியரசு’ வில் எழுதிவிடுவதாகவும் ஈவேரா கட்டாயப்படுத்தினார்.

தான் உயிரோடிருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.

1) ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார் – பின்னர் சமதர்ம விரோதிகளான R K சண்முகம் செட்டியார், ஏ ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈவேரா.

2) ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று புகழ்ந்தார் ஈவேரா.

3) லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக்காரர்கள் எல்லாம் ஒழிய வேண்டும் சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக் குலாவினார் ஈவேரா.

4) மதங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று விருது நகர் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார் ஈவேரா!

5) திருநெல்வேலி மாநாட்டில் கொள்கைப் பரப்பலில் ஈடுபட்ட சுயமரியாதை இயக்க முக்கிய ஊழியர்களைத் தாக்கி, அவர்தம் கொள்கையைப் பழித்த சோமசுந்தர பாரதியை ஆதரித்து ‘குடியரசில்’ தலையங்கம் எழுதினார் ஈவேரா!

(“ஈரோட்டுப் பாதை சரியா?”- by ப ஜீவானந்தம் – சந்தியா பதிப்பகம் – பக்கம் 25 -29)

மேலே காட்டியிருப்பது கம்யூனிஸ்ட் தலைவர் ப ஜீவானந்தம் அவர்கள், ஈவேரா வைப் புத்தகம் முழுக்கக் கிழித்துத் தொங்க விட்டிருப்பதில் சிறிய சாம்பிள்தான்.
என்னுடைய கவலையே கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள், தோழர் ஜீவா இப்படி எல்லாம் ஈவேராவைக் கிழித்திருப்பதைப் படித்து விட்டு “பாலன் இல்லத்தின்” மீது வீசிவிடுவார்களோ என்பதுதான்! பாவம் வீதி வீதி யாக உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில் கட்டியதாகக் கூறிக் கொள்கிறார்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe