வருத்தம் தெரிவித்த பின்னரும் விமர்சனம் தேவையா? எச்.ராஜா விவகாரம் குறித்து டிடிவி தினகரன்

சற்றுமுன் தமிழகம்

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பதிவு செய்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவிட்டனர். பெரியார் என்றால் யார் என்று தெரியாதவர்கள் கூட திடீர் பெரியார் தொண்டராக மாறி எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்த காமெடியை மக்கள் அமைதியாக பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து டிடிவி தினகரன் கூறியபோது ‘பெரியார் சிலை குறித்து எச்.ராஜா கூறிய கருத்து சர்ச்சைக்குரியதுதான். இருப்பினும் அவர் வருத்தம் தெரிவித்த பின்னரும் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்துவருவது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது என்றும் இது முழுக்க முழுக்க அரசியல் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

‘பெரியார் சிலை பற்றி ராஜா சொன்ன கருத்துக்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டி முதல்வர் கண்டிக்கவில்லை என்றும் அவர் எச்.ராஜாவை கண்டிப்பதற்கு பதில் ராஜாவின் அட்மினை கண்டித்ததில் இருந்தே அவரது வீரம் தெரிவதாகவும் தினகரன் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.