கோயில் இடிப்பு தொடர்பில் தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன் திட்டமிட்டபடி போராட்டம்! இந்து முன்னணி உறுதி!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
sambankulam hindumunnani
sambankulam hindumunnani

தென்காசி மாவட்டத்தில் இரண்டு கோயில்களை எவ்வித விசாரணையுமின்றி கண்ணை மூடிக் கொண்டு உடனே இடிக்க உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சம்பன்குளம் கிராமத்தில் நாடார் உறவின் முறைக்கு உரிய பச்சை சாத்தி மாடன் கோயில் அங்குள்ள இஸ்லாமியர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில் மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது அடுத்துள்ள அழகப்பபுரம் கிராமத்திலும் கோயில் ஒன்று இடிக்கப்பட்டது 

இது குறித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த இந்து முன்னணி அமைப்பினர் இடிக்கப்பட்ட கோயில்களை அதிகாரிகள் செலவில் கட்டித்தர வேண்டும் என்றும் இது தொடர்பாக சமுதாய மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கூறிவருகிறது ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்க காரணத்தால் இந்து முன்னணி அமைப்பினர் திங்கள் நாளை ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர் 

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாளை காலை ஜூன் 22, 10.30 மணிக்கு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறு என்றும், சம்பன்குளம் அழகப்பபுரம் இரண்டு கோயில்களை இடித்த மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் Vp ஜெயக்குமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.  

இந்நிலையில், மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார்  இந்த முற்றுகைப் போராட்டம் குறித்து குறிப்பிட்ட போது, நாளைய எமது உரிமை  போராட்டத்தை ( தென்காசி )  சீர்குலைக்க  உளவுத்துறை காவலர்கள் சிலர் மாவட்ட பொறுப்பாளர்களிடம் போன் செய்து நாளை போராட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது வேண்டுமானால் உங்கள் தலைமையிடம் கேளுங்கள் என்று பொய்யான தகவலைப் பரபி வருகின்றனர். இதனால் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் எவரும் குழம்ப வேண்டாம்.நாளை திட்டமிட்டபடி நிச்சயம் போராட்டம் நடைபெறும்… என்று கூறினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.