
தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் அருகே கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான கரூர் அடுத்த ஆண்டான்கோயில் கீழ்பாகம் பகுதியில், தனது பாரம்பரிய தொழிலான விவசாயம் தொழில் ஒரு பகுதியான மாட்டு வண்டி ஓட்டும் பணியில் ஈடுபட்டார்.

ஏற்கனவே கரூர் திருவள்ளூர் மைதானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் விவசாய பயனாளிகளுக்கு டிராக்டர் நல்லபடியாக உள்ளதா என்பதை சோதனையிட்டு அவரே டாக்டர் ஓட்டி, பின்னர் டிராக்டர் 4 உள்ளது என்றும் இதை விவசாயிகள் பயன் படுத்தலாம் என்று கொடுத்த நிலையில் தற்போது, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் அவரது விவசாயத் தொழிலில் ஒரு பகுதியான மாட்டு வண்டி ஓட்டிய இப்பகுதி மக்களிடையே மட்டுமில்லாமல் தமிழக அளவில் பெரும் வரவேற்பையும், சுவாரஸ்யத்தையும் பெற்றுள்ளது.

மேலும் காவல்துறையினர் யாருமில்லாமல் அதிமுக நிர்வாகிகள் உடன் இல்லாமல் அவரே ஓட்டிய செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.