சீனா எத்தனை குயுக்திகள் செய்தும்… பாலம் கட்டி சாதித்துக் காட்டிய இந்திய ராணுவம்!

Published:

galwan bridge
galwan bridge

இந்தியா எதை செய்யக்கூடாது என்று சீனா இவ்வளவு நாள் தடுக்க முயன்றதோ அதை செய்து சாதித்து காட்டியுள்ளது இந்திய இராணுவம்..

கால்வான் ஆற்றின் குறுக்கே 60 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தை இந்திய இராணுவத்தின் என்ஜினீயர்கள் அமைத்து உள்ளனர்..இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது..அதி முக்கியத்துவம் வாய்ந்த டர்புக் இல் இருந்து டஉலட் பேக் ஓலடி வரையிலான இந்தியாவின் 255 கிலோமீட்டர் சாலைகளை ஒருங்கிணைக்க இது உதவும்.. இந்த பாலம் மூலம் இந்தியா கனரக ஆயுதங்களை கால்வான் ஆற்றை கடந்து கொண்டு செல்ல முடியும்.. 

கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கை முழுவதுமாக கைப்பற்றி, இந்தியாவின் எல்லையை, ஷையோக் ஆற்றுடன் நிறுத்த வேண்டும் என்பது சீனாவின் திட்டம். அப்படிச் செய்தால், அங்கிருக்கும் சாலையை சொந்தமாக்கி, தவுலத் பெக் ஓல்டி உடனான இணைப்பை துண்டிக்கலாம். அங்கிருந்து முர்கோ வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கலாம் என்பது சீனாவின் திட்டம். அதற்காகத்தான், திடீரென்று கால்வான் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்று திடீரென கோஷம் எழுப்பி, கடந்த வாரம் ஆக்ரமிப்பு நாடகம் நடத்தியது.  

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ஆனால், லடாக்கில் சீன ராணுவத்தினரின் எத்தனையோ இடையூறுகளை மீறி கல்வான் ஆற்றில் இந்திய ராணுவம் புதிய பாலத்தை வெற்றிகரமாகக் கட்டி முடித்துள்ளது. 

லடாக்கில் கல்வான் ஆற்றின் மீது குறுகலான நடைபாதை இருந்தது. இதை அகற்றி 60 மீட்டர் பாலம் கட்டும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. கல்வான் பகுதியில் இந்திய – சீன ராணுவத்தினரின் மோதலுக்கு இடையிலும் பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது..

இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதன் மூலம், இந்திய ராணுவம் கல்வான் ஆற்றைக் கடக்க முடியும். அத்துடன் தர்புக் – தவுலத் பெக் ஓல்டி வரையிலான, 255 கி.மீ., சாலையை பாதுகாக்கவும், காரகோரம் கணவாய்க்கு தெற்கே, கடைசியாக உள்ள ராணுவ முகாமுக்கு சுலபமாக செல்லவும் முடியும்.

இந்தப் பாலம், ஷையோக் – கல்வான் ஆறுகள் சந்திப்பில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. ராணுவத்தின் 14வது கண்காணிப்பு முகாம் அருகே உள்ள இந்த பகுதியில் தான் சீன – இந்திய ராணுவத்தினரின் மோதல் நிகழ்ந்தது. ஆனால் தற்போது கல்வான் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் இந்திய ராணுவ வாகனங்கள் ஆற்றை கடக்கவும் பிற வழிகளில் சீன ராணுவம் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியும். 

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img