கணவர் கொடுமைப் படுத்துகிறார்: நடிகை ரதி போலீஸில் புகார்

இந்தியா

rathiமும்பை: தனது கணவர் அனில் தன்னைக் கொடுமைப் படுத்துவதாக முன்னாள் நடிகை ரதி போலீஸில் புகார் அளித்துள்ளார். மும்பை காவல் துறை ஆனையர் அலுவலகத்துக்கு வந்த நடிகை ரதி தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என் கணவர் என்னை அடித்துத் துன்புறுத்துகிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். அவரது புகார் குறித்து கருத்து தெரிவித்த துணை ஆணையர் எஸ்.ஜெயகுமார், ரதியின் புகாரின் பேரில் அனில் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார் நடிகை ரதி, புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான அவர் ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் கமல் ஹாஸனுடன் உல்லாசப்பறவை உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் ஹிந்தி திரையுலகம் சென்ற அவர் 1985ம் ஆண்டு அனில் விர்வானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். அவரது மகன் தனுஜ் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.