எந்த சாமியை எப்படி கும்பிட்டால் உடனே பலன் கிடைக்கும்!?

ஆன்மிகச் செய்திகள் ஆலோசனைகள் கட்டுரைகள்

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரஹம் வலு குறைவோ அந்த கிரஹத்துக்குடைய அதிபதியானவருக்கு உண்டான தெய்வம் எதுவோ அந்த ஸ்வாமியை வணங்க வேண்டும். அப்படிச் செய்தால், பலன் உடனே கிடைக்கும்.

ஒரு அன்பர் வைணவர். அவருக்கு ஜாதகத்தில் தொழிலுக்குரிய செவ்வாய் கிரஹம் வலுவிழந்து இருந்தது. அதனால் அவர் வேலையில் நிறைய சிரமங்களை சந்தித்தார். அவர் ஜாதகப்படி அவர் பால முருகனை கும்பிட வேண்டும் என்று சொன்னேன். அவரும் தினம் கும்பிட்டு வந்தார். இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.

சனி என்றால் ஆஞ்சநேயரைக் கும்பிட வேண்டும். ராம நாமம் ஜெபித்தால் நல்லது நடக்கும்.

இப்படி ஒவ்வொரு கிரஹத்துக்கும் ஒரு தெய்வம் உள்ளது. அந்த தெய்வத்தை வணங்குவதற்குரிய மந்திரம் இருக்கிறது. அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு செயல் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

  • ஜோதிடர் ரவி சாரங்கன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.