aadhar - 2026

மக்கள் ஆதார், பான் விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்: CBIC எச்சரிக்கை!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
aadhar - 2026

சரியான காரணங்கள் இல்லாமல் ஆதார் அட்டை மற்றும் பான் விவரங்களைப் பகிர வேண்டாம் என்று மத்திய மறைமுக வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது.

ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக மோசடி செய்பவர்கள் இந்தத் தகவல்களை தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வரிகள் வாரியம் கூறியுள்ளது.

பண ஆதாயங்களை பெறவும், வரி ஏய்ப்பு செய்யவும், ஜிஎஸ்டியில் போலி நிறுவனங்களை உருவாக்க இந்த தகவல் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில் ” வரி ஏய்ப்புக்காக ஜிஎஸ்டியில் போலி நிறுவனங்களை உருவாக்க ஆதார் மற்றும் பான் விவரங்களைப் பயன்படுத்தலாம், எனவே மக்கள் சரியான காரணமின்றி இவற்றைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக, ஜிஎஸ்டி அதிகாரிகள், உண்மையான தகவல்கள் வழங்கப்படாமல் போலி விலைப்பட்டியல்களைத் திரட்டிய பல போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளீட்டு வரிக் கடனை (ITC) மோசடியாகப் பெறுவதே ஒரே நோக்கம் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.