சிவன் மலை: ஆண்டவர் உத்தரவு பெட்டியில் உப்பு, நீர், நாணயம், சிவலிங்கம்!

Published:

sivan malai - 2026

சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுபெட்டியில் நேற்று கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயம், சிவலிங்கம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.

இங்குள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி குறிப்பிடும் பொருட்களை வைத்து பூஜை செய்வது வழக்கம்.

வெள்ளகோவிலை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவரின் கனவில் தோன்றியபடி, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயம், சிவலிங்கம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Related articles

Recent articles

spot_img