Needle fruit - 2026

ஊட்டி ஊசிப்பழ சீசன் துவக்கம்!

தமிழகம் அடடே... அப்படியா? சற்றுமுன்
Needle fruit - 2026

ஊட்டிக்கே உரித்தான ஊசிப் பழ சீசன் துவங்கியுள்ளதால், தற்போது ஏராளமானவர்கள் இந்த பழங்கழை பறித்து சுவைத்து வருகின்றனர்

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு சோலைக்காடுகள் அதிகம். இந்த காடுகளில் பல்வேறு மூலிகை தாவரங்கள், பழங்கள் ஆகியவைகள் உள்ளன.

குறிப்பாக, ஊசிப்பழம், தவிட்டு பழம் மற்றும் பிக்கி பழம் போன்ற பழ வகைகள் அதிகளவு காணப்படுகிறது. இந்த பழங்கள் மிகவும் சுவை மிகுந்து காணப்படும் நிலையில், இதனை பொதுமக்கள் பறித்து சுவைப்பது வழக்கம். சிலர் இதனை வனங்களில் இருந்து பறித்து வந்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் ஊசிப்பழ சீசன் துவங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள வனங்களிலும் இந்த பழங்கள் அதிகளவு காணப்படுகிறது.

தொட்டபெட்டா, பைக்காரா, பைன் பாரஸ்ட் மற்றும் மசினகுடி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலையோரங்களிலும் இந்த பழங்கள் அதிகளவு காணப்படுகிறது.

இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் சுவைத்து மகிழுகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.