ரஜினி காந்த், கமல்ஹாசன் இருவருமே கலை உலகில் துவங்கி இப்போது அரசியல் உலகு வரை சரி சமான காலத்தில் இறங்கி விட்டார்கள். கலை உலகில் இருவரின் பயணமும் எதிரெதிராக அமைந்தது. அது போல் அரசியலிலும் அப்படியே அமைந்து விட்டது.
கமல்ஹாசன், ரஜினி காந்த் இருவருமே கருணாநிதி, ஜெயலலிதா இரு ஆளுமைகளும் இல்லாத சூழலில் திடீரென அரசியல் களத்தில் புகுந்திருக்கின்றனர். ரஜினி காந்துக்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகவே அரசியல் அழைப்பு இருந்த போதும், அவர் அதில் ஈடுபடாமல், வாய்ஸ் மட்டும் கொடுத்து வந்தார். கமல் இதுவரை கலைப் பயணத்தில் மட்டுமே இருந்துவந்தார். இயக்குனர் விசு சொன்னது போல், மனைவி குடும்பம் எதுவும் இல்லாமல் தனித்து விடப்பட்ட சூழலில் திடீரென அரசியல் ஞானம் உதயமாகி அரசியல் ஆழம் பார்க்க குதித்துவிட்டார்.
இந்த நிலையில், இருவரின் அரசியல் பின்னணி, ஆதரவாளர்கள், ரசிகர்கள் ஆதரவு நிலை, தொண்டர் படை பின்புலம், கொள்கை ரீதியாக ஒருங்கிணைபவர்கள் என பலவற்றையும் அரசியல் கள நிபுணர்கள் அலசி வருகிறார்கள். நாம் ஜோதிட ரீதியாக ஜாதகங்களை வைத்து அணுகுவோம்.
ரஜினி காந்த் ஜாதக தொடர்பு இதுதான். ரஜினியின் ஜாதகத்தில், 5ல் சூரியன், 9ல் ராகு, 3ல் சனி கேது, 7ல் குரு – எனவே, சூரியன் சனி நிலைப் படி பார்த்தால், அரசியல் வானிலும் ரஜினி என்ற நட்சத்திரம் ஜொலிக்கும். கேது தொடர்பால், அவரது அரசியல், ஆன்மீக அரசியல் ஆகிப் போனது.
கமல்ஹாசன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், நாடியில் கண்டபடி, 1ல் குரு, 5ல் வக்ர சுக்கிரன், 9ல் சந்திரன், 7ல் செவ்வாய், 12ல் கேது, 7ல் செவ்வாய். எனவே, செயலில் வேகம் இருக்கும். ஆனால், அரசினைத் தரவோ அரியணை ஏறவோ சூரிய சனி பலம் இல்லை.
கணிப்பு:- எஸ்.வி.அமுதசாகரன்,
அதிர்ஷ்டலட்சுமி ஜோதிடம்,
பெரியார் வளைவு சிக்னல் அருகில்(பிரபாத்),
குகை, சேலம். Cell: (+91) 70101 02296





நனà¯à®±à®¿ அயà¯à®¯à®¾
Impossible for both?