ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசன் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான குவாலிபயர் 1 பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. பரபரப்பான இப்போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
அரை இறுதியாகவே அமைந்துள்ள இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 27ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகளிடையே நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், குவாலிபயர் 1ல் தோற்ற அணி மே 25ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் 2வது குவாலிபயர் ஆட்டத்தில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு முன்னேறும்.



